download
நெல்சன் மண்டேலா விடுதலை (1990)
நெல்சன் மண்டேலா ,  தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்குஎதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக  விளங்கினார்.
தொடக்க காலத்தில் அமைதியான போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.  இதையடுத்து அரசால் கைது செய்யப்பட்டார்.
27 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, 1990ம் ஆண்டு இதே நாள் விடுதலை செய்யப்பட்டார்.  ,. சிறையின் பெரும்பாலான காலத்தை  ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
d
 
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் (1847)
ஒளிவிளக்கு, திரைப்படக்கருவி போன்ற அற்புத கண்டுபிடிப்புகளை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் தனது பெயரில் 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்து வைத்திருந்தார்.   இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; ஏற்கெனவே   புது கண்பிடிப்புகளை உருவாக்கியவர்களிடம் இருந்து, மறு உரிமை வாங்கியவையும் உண்டு. அதே போல,, இவரது ஊழியர்களால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளும் உண்டு. இவற்றுக்கான உரிய பங்கை தராமல் ஏமாற்றினார் என்றும் எடிசன் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
 
download (2)
ம.சிங்காரவேலர் நினைவு நாள் (1946)
விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற சிங்காரவேலர்,   பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில்  முதன் முதலாக பரப்பியவர். அதனால்  “சிந்தனைச் சிற்பி”  எனப் போற்றப்படுகிறார்.
சட்டப்படிப்பு படித்த இவர்,  உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார்.  பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காகவே வாதாடினார்.  1921-ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு தனது வழக்கறிஞர் தொழிலைப் புறக்கணித்தார்.
இந்தியாவில் முதன்முதலாக, தொழிலாளர் தினத்தை ( மே 1) கொண்டாடினார்.   ரஷ்ய  கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்ட இவர்,   இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். 1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.  பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது.  காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி இவரே. .
தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
பல நூல்களை எழுதியதோடு,  மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.