ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள் (1809)
ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கன்,  அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் முக்கியமானவர். . 1860ல் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வென்றார்.
ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைவாதிகளை எதிர்த்து  உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர்.
1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்.  இவர் மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார்.  இவரது  கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு உலகப்புகழ் பெற்றது.
1865 ஏப்ரல் 15ல்,  வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார்.
 
சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்தநாள் (1809)
இவர்,  ஆங்கிலேயஇயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை[ ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை என்று போற்றப்படுகிறது.
இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தேற்றம் என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
இவர் கடல் வழியேஎச்எம்எஸ் பீகிள் என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகஸ் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் மனித குலத்துக்கு மிகவும் உதவுபவையாகும்.
குரங்கில் இருந்துதான் மனித இனம் தோன்றியது என்று இவர் கூறிய கருத்தை அப்போது பலர் எள்ளி நகையாடினர். ஆனால் பிற்காலத்தில் அந்த கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டது.
தகுதியானது உயிர் வாழும் என்ற கருத்தையும் கூறியவர் இவர்தான்.
 
ஜி. யு. போப்  நினைவு நாள் !1908)
ஏப்ரல் 24, 1820  கனடாவில் பிறந்த ஜி.யு. போப்,  கிறிஸ்தவ சமய போதகராக விளங்கினார்.  அம் மதத்தை தமிழ் நாட்டில் பரப்ப இங்கு வருகைதந்தார்.  பிரச்சாரத்துக்காக தமிழ் கற்றவருக்கு, தமிழ் மொழி மீது மிகுந்த பற்று ஏற்பட்டது.  40 ஆண்டு  காலம் தமிழுக்கு சேவை செய்தார்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
1886 ஆம் ஆண்டு   திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.

  • புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
  • தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர்நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.[1]

  • இறப்புக்கு பின் தனது கல்லறையில்இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்[1](அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).
  • தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்
  • கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் .[1]