download (1)
விண்டோஸ் 2000  வெளியிடப்பட்டது (. 2000 – )
 வின்டோஸ் 2000 ,  Win2K மற்றும் W2K என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே தமிழில் யுனிக்கோட் முறையில் முதன் முதலாகத் தமிழை உள்ளீடு செய்ய உதவிசெய்த இயங்குதளமாகும்.  இது கி.பி. 2000ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டது.
 
download
 
யுவான் அல்மெய்டா  பிறந்தநாள் (1927)
கியூப துணை அதிபராக இருந்த யுவான் அல்மெய்டா, கியூபா புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவராவார். புரட்சிக்குப் பிறகு  கியூபா பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்தார்.   புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தவர் ஆவார்.
பிடல் காஸ்ட்ரோ மற்றும் ராவுல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடினார்.  இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் இறக்கப்பட்டது.
அவானாவின் வறுமையான பகுதி ஒன்றில் பிறந்த அல்மெய்டா தனது 11 வயதில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தி கட்டிடத் தொழிலாளி ஆனார். அவானா பல்கலைக்கழகத்தில் 1952 இல் சட்டம் பயின்ற அல்மெய்டா, அங்கு பிடெல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டார். அதே ஆண்டில் கியூபப் புரட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
புரட்சிக்குப் பிறகு துணை அதிபராக இருந்த அல்மெய்டா,  செப்டம்பர் 11, 2009ல் இயற்கை எய்தினார்.