ramakrishna parama
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள் (1836)
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்று பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர் ஆவார். இவர் விவேகானந்தரின் குரு ஆவார்.  அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
இவரது பெயரில் துவக்கப்பட்ட ஆன்மீக சேவை மையங்கள், பலவித சமூக சேவைகளை செய்து வருகின்றன.
ஆகஸ்ட் 16, 1886ல்  மறைந்தார்.
 
m. siingaravelu
. சிங்காரவேலர்  பிறந்தநாள் (1860)
பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான இவர் சிந்தனை சிற்பி என புகழப்படுகிறார்.
மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து,  சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில் இருந்த தனது வீட்டில்  20,000 நூல்களுக்கும் மேல்  சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும், ஏழை மக்களுக்காகவே வாதாடினார்.

  • சிங்காரவேலரின் சிறப்புகளில் சில…
  • இந்தியாவில் முதன்முதலாகமே நாளை (தொழிலாளர் தினம்)  கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
  • சோவியத் யூனியன்கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
  • தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியைத் தொடங்கினார்.
  • 1925ல்இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
  • இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
  • தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.

 
martin
மார்ட்டின் லூதர் நினைவு நாள் (1546)
நவம்பர் 10,1483 அன்று பிறந்த மார்ட்டின் லூதர்,  பள்ளிக்கல்விக்குப் பிறகு கிறித்துவ துறவி ஆனார்.  மத சீர்திருத்த வாதியாக திகழ்ந்தார்.  மதம் சார்ந்த  அதிகாரம் விவிலிய நூல் மட்டுமே என்றார்.  ஆகவே கிறித்துவ மத திருத்தந்தைகளின் அதிகாரத்துக்கு இது சவால் விடுவதாக இருந்தது.
அந்தக் காலத்தில்  பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்கும் முறையைக் கடுமையாக எதிர்த்தார். தமது புரட்சிகரமான கருத்துக்களால்  மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றார்.