download (1)
ஜார்ஜ் வாஷிங்டன்  பிறந்தநாள் (1732)
அமெரிக்க விடுதலைப்போருக்கு தலைமை தாங்கி பிரிட்டிஷ் படையை தோற்கடித்தவர்.    ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் இவரே.   இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
download (2)
கஸ்தூரிபாய் நினைவு தினம் (1869)
மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவி. கணவரின் போராட்டங்கள் அனைத்திலும் உடன் இருந்தவர்.   காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர்.
கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தவர்.
காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்  கஸ்தூரிபாய் காந்தி.[
 download (3)
செயிண்ட் லூசியா சுதந்திர தினம்
கரிபியக்கடலும் அ ட்லாண்டிக் கடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு செயிண்ட் லூசியா.
பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் மாறிமாறி காணப்பட்டது.
14 தடவை பிரான்சுடன் போரிட்டப்பிறகு  பிரிட்டன், இத்தீவை பிரான்சிடமிருந்து கைப்பற்றியது.  1814 ஐக்கிய இராச்சியம் தீவை முழுக்கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. சில அரசியல் மாற்றங்களுக்குப்பிறகு பிப்ரவரி 22 1979 இல் செயிண்ட். லூசியா சுதந்திர நாடானது.