download
 ஜெயலலிதா  பிறந்தநாள் (1948)
தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கிய ஜெயலலிதா, அரசியலில் நுழைந்து தற்போது மூன்றாவது முறை முதல்வராக இருக்கிறார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மூலமாக அரசியலுக்குள் நுழைந்த இவர், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முதல்வர்  இவரே. தற்போது இவ்வழக்கு மேல் முறையீட்டில் இருக்கிறது.
இவர் மீது பல்வேறு கடுமையான விமர்சனங்கள் உண்டு.  என்றாலும், பெண்ணடிமைத்தனம் நிலவும் நாட்டில், தன்னம்பிக்கையோடு செயல்பட்டு முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் இவர் அந்த வகையில் பாராட்டத்தக்கவரே.
download (1)
ருக்மிணி தேவி அருண்டேல்  பிறந்தநாள் (1904)
மதுரையில் பிறந்த ருக்மணி தேவி, சிறு வயதிலேயே கலைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்  அந்தக் காலக்கட்டத்தில் (1900 +) இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது.  அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று நினைத்தார். நடனக்கலையில் ஈடுபட்ட அவர் அதில் பல புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார்  அனைவரும் நடனக்கலை பயில வசதியாக சென்னையில் கலாச்சேத்திரா என்ற மையத்தை அமைத்தார். அது உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
 
 download (2)
. மாயாண்டி பாரதி நினைவுதினம்  (2015)
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப்போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் மாயாண்டி பாரதி.  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவராகவும் இருந்தார். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர், தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களின் வழியாகப் பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பி வந்தவர்.
 
download (3)
வாட்ஸ்அப் துவங்கப்பட்ட தினம்
இன்று சமூகவலைதளங்களிலேயே மிகப் பிரபலமான வாட்ஸ் அப், 2009 ம் ஆண்டு  ஜான் கௌமால் கலிபோர்னியாவில்  இதே தினத்தில்தான் தொடங்கப்பட்டது.