இந்திய விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய  மாவீரன் பகத்சிங் பிறந்த நாளான செப்டம்பர் 28 அன்று அவரை நினைவு கூர்வோம்

கடந்த 1907 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லயாலூரில் பிறந்தார்.   இவர் சர்தார் கிஷன் சிங் மற்றும் வித்யாவதி தம்பதியருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தார்.   இவருடைய குடும்பமே ஒரு சுதந்திரப் போராட்ட குடும்பம் ஆகும்.  இவர் பிறந்த அன்று விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற இவர் தந்தை மற்றும் இரு மாமாக்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இளம் வயதில் இருந்தே நாட்டுப்பற்றுடன் இருந்த பகத் சிங்  பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார்.   தனது பள்ளிப்பருவத்தில் அவரது ஊரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலேய விசுவாசிகளாக இருந்ததால் இவரை இவர் குடும்பத்தினர் ஆர்யசமாஜ் பள்ளியான தயானந்த் பள்ளியில் சேர்ந்தனர்.    தனது 12 ஆம் வயதில் நடந்த ஜாலியான் வாலா பாக் படுகொலையால் பகத் சிங்  ஆங்கிலேயர் மீது கடும் கோபம் அடைந்தார்.

அவர் தனது கல்லூரிக் காலத்தில் பல கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்று பெரும் புகழை அடைந்தார்.    வீட்டில் திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்ததால் அவர் தனக்கு இல்வாழ்க்கையில் விருப்பம் இல்லை எனவும் நாட்டின் சுதந்திரமே முக்கியம் எனவும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த 1928 ஆம் வருடம் லாகூரில் லாலா லஜபதி ராய் நடத்திய அகிம்சை போராட்டத்தில் காவலர்கள் தடியடி நடத்தி குறிப்பாக ஜேம்ஸ் ஸ்காட் என்னும் அதிகாரி லாலா லஜபதி ராயைக் கடுமையாக தாக்கினார்.  அதன் பிறகு லாலா மரணம் அடைந்த போது ஆங்கிலேய அரசு இந்த மரணத்துக்குப் பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டது.

லாலா லஜபதி ராய் மரணத்தையொட்டி அவரை தாக்கிய அதிகாரி ஸ்காட்டை கொல்ல பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவி தபார் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் இணைந்து திட்டம் தீட்டினர்.   கடந்த 1928 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்த கொலை நடந்தது.  இந்த கொலைக்கு மகாத்மா காந்தி கண்டனம் தெரிவித்த போதும் ஜவகர்லால் நேரு கொலையை ஆதரித்து அறிக்கை விடுத்தார்.

இந்த கொலை வழக்கில் பகத் சிங்குக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.   பகத் சிங் 1931 ஆம் வருடம் மார்ச் 23 ஆம் தேதி அன்று அவருடைய 24 ஆம் வயதில் தூக்கிலிடப்பட்டார்.   அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்றும் இந்திய விடுதலை வரலாற்றில் இடம்  பெற்றுள்ளது.