இன்று முதல் பீகாரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. நிதிஷ் தேர்தல் வாக்குறுதி அமுல்படுத்தினர்.
CUvMomRUAAIjMjI
 
பீகார் மாநிலம் முழுவதும் இன்று முதல் மதுவிலக்கு அமலுக்கு வந்துள்ளது. நிதிஷ்குமார் நான் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
முன்தாக சட்ட திருத்தம் நேற்று முன் தினம் பீகார் மாநில சட்ட சபையில் கொண்டு வரப்பட்டது. பீகார் மாநிலத்திலுள்ள 6000 மதுக்கடைகளில், இனி 656 மதுக்கடைகள் மட்டுமே இயங்க உள்ளன. அவையும் ஆறுமாத காலத்துக்குள் படிப்படியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மது விலக்கு காரணமாக பீகார் மாநில அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
மது குடித்து தகராறு செய்பவர்களுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் மேலும் தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மது விலக்கை அமல்படுத்த போலீசாருக்கு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடைசி நாளான நேற்று பீகார் மாநிலம் முழுவதும் மது அதிகளவில் விற்பனை நடந்தது. குறைந்து விலைக்கு விற்தால் பை நிறைய போட்டி போட்டு கொண்டு மதுபாட்டில்கள் வாங்கி சென்றனர்.