ஸ்டாம்ப்

இவரது கண்டுபிடிப்பை பயன்படதுத்தாத மனிதர்களே இல்லை. அப்படி என்ன கண்டுபிடித்தார் இவர்?

இங்கிலாந்தில் நவீன அஞ்சல் சேவையை உருவாக்கியவர்தான் இந்த ரோலண்ட் ஹில்.

ஆரம்பத்தில் கடித சேவை துவங்கப்பட்டபோது, முன்பணம் செலுத்தி கடிதம் வாங்கி அதில் எழுதி அனுப்பும் முறை இல்லை. கடிதம் உரியவரிடம் கொடுக்கப்பட்ட பிறகே பணம் வசூலிக்கும் முறை இருந்தது. சிலர், தபாலின் மேல் அட்டையில் குறியீடாக சில வார்த்தைகளை எழுதி அனுப்புவார்கள். உரியவர்கள், தபாலை வாங்கி (பிரிக்காமலே) அந்த குறியீடு மூலம் விசயத்தை அறிந்துகொண்டு, “இது எனக்கு வந்த தபால் அல்ல” என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

ஆகவே நெடுந்தூரம், குதிரையில் பயணப்பட்டு வந்து தபால் கொடுத்தவருக்கு எந்த வருமானமும் இருக்காது.

தவிர, கடிதத்தின் எடையும், அளவும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இந்த நிலையில்தான், சர் ரோலண்ட் ஹில் என்பவர் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ‘ஃபோர் பென்னி போஸ்ட்’ என்கிற தன் திட்டத்தை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்படி, 1839ம் ஆண்டு முதல், பணம் கொடுத்து தபால் வாங்கி அதில் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. அவரது பிறந்தநாள் இன்று.