1

மைகெல் டி நோஸ்ரடேம் என்ற நோஸ்ராடாமஸ் கூறியதாக சொல்லப்படும் எதிர்கால கணிப்புகள் புகழ் பெற்றவை. 1555ம் ஆண்டு எழுதிய “லெஸ் புரோபெடீஸ்” என்கிற புத்தகம் மூலம் சொல்லியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக பலரும் நம்புகிறார்கள். அக்காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையால் இவை, சாத்தானின் எச்சரிக்கைகளாக பார்க்கப்பட்டன. ஆகவே திருச்சபைக்கு பயந்து நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.

இந்தய பாகிஸ்தான் போர், ஈராக் மீதான அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்.. அவ்வளவு ஏன்.. சீபத்திய தமிழக வெள்ள சேதம் பற்றி எல்லாமும் இவர் கூறியிருக்கிறார் என்பவர் பலர். ஆனால், “நாஸ்டர்டாம் தனது புத்தகத்தில் புரியாத கவிதை போல எழுதி வைத்திருக்கிறார். அவற்றை பல விதங்களில் அர்த்தம் கொள்ள முடியும். ஆகவே அவற்றை பொருட்படுத்த வேண்டியவிதில்லை” என்பவரும் உண்டு.

யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும் கூறுகின்றனர். நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களைக் குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம்.