seran
ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் செல்லம் மகன் பழனியப்பன். இவர் ராமநாதபுரத்தில் பழனியப்பா டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். இவர் சினிமா இயக்குளர் சேரன் சி 2 எச் நெட்வொர்க் நிறுவனத்தில் ரூ.8.40 லட்சம் முன்பணம் செலுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் சினிமா டிவிடி விற்பனை உரிமையை பெற்று இருந்தார். நிறுவனம் முறையாக செயல்படாததால் தான் முன்பணமாக செலுத்திய ரூ.8.40 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதை தொடர்ந்து நிறுவனர் சேரன் மற்றும் நிர்வாக இயக்குநர் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகியோர் 2015ம் ஆண்டு ஆக. 16-ந்தேதி காசோலை வழங்கியுள்ளார். 3 முறை வங்கிக்கு காசோலையை அனுப்பியும் பணம் இல்லாததால் செக் திரும்பியது என பழனியப்பன் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் ஜே.எம் 2 நீதிபதி வேலுச்சாமி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
ஜனவரி 11, பிப். 10, மார்ச் 10 ஆகிய மூன்று முறை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் நிர்வாக இயக்குநர் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி ஆகியோர் மீது பிணையில் விடக்ககூடிய பிடியாணை பிறப்பித்து, ஏப்ரல் 13-ந் தேதி ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று திங்கள்கிழமை ராமநாதபுரம் ஜே.எம்.2 கோர்ட்டில் சேரன் நீதிபதி முன்பு ஆஜரானார்.