p

 

ரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பார்கள். அது போல  பல பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன.  இந்த வெள்ள நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு  டீசல் மற்றும் பெட்ரோலை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கின்றன.

சென்னை வி.ஜி.பி. அருகில் இருக்கும்  தனியார் முகவர் நடத்தும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு திடுமென, “பெட்ரோல் இல்லை.. தீர்ந்துவிட்டது” என்று வாகனங்களை திருப்பி அனுப்பினார்கள். நாம் சென்று பார்க்கும்போது,  நூறு லிட்டர் கொள்ளளவு உள்ள நான்கு கேன்களில் டீசலை நிரப்பி, அதை  ஒரு வாகனம் (மகேந்திரா xuv ) மூலம் எங்கோ எடுத்துச்செல்ல ஏற்றினார்கள்.

12333129_10153823275409048_898517296_o

 

நாம், , “வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு  போடாமல், எங்கு கடத்துகிறீர்கள்” என்று கேட்டோம். அதற்கு பெட்ரோல் பங்கில் இருந்தவர்கள், ” இதோ இந்த ஆம்புலன்ஸ் வண்டிக்குத்தான் இந்த டீசலை அனுப்புகிறோம்” என்றார்கள்.  “எந்த ஆம்புலன்சிற்கு நானூறு லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.. தவிர, ஆம்புலன்ஸில் ஏற்றாமல் வேறு வாகனத்தில் ஏற்றுகிறீர்களே” என்று கேட்டோம்.  நமது கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அவர்கள், பிறகு வாகனங்களுக்கு டீசல் போட்டார்கள்.

இது போல பல பங்குகள், பெட்ரோல் மற்றும் டீசலை பதுக்கி கடத்தி செயற்கையான தட்டுப்பாட்டை சென்னையில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில்  காத்திருக்கவேண்டியிருக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–  கே. சுரேந்தர்