டில்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்தது குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன.

உச்சநீதிமன்ற இடைநிலை பெண் உதவியாளர் ஒருவர் தன்னிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளித்துள்ளார். அத்துடன் தாம் நீதிபதியின் இச்சைக்கு இணங்காததால் தாமும் தம் குடும்பத்தினரும் ஏராளமான கொடுமைகளுக்கு ஆளானதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் உத்சவ் பைன்ஸ் இந்த புகார் போலி எனவும் ர்ஞ்சன் கோகாய் ராஜினாமா செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளர். வழக்கறிஞர் உத்சவ் பைன்ஸ் அசாராம் பாலியல் தாக்குதல் வழக்கில் சாட்சிகளை காக்க போராடியவர் என்பது குறிப்பிடத்தகக்து.

உத்சவ் பைன் தனது முகநூல் பதிவில், “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் உதவியாளர் அளித்த பாலியல் தொந்தரவு புகார் குறித்து வாதிடவும் இதற்காக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தவும் ஒருவர் எனக்கு ஏராளமான பணம் அளிப்பதாக கூறினார். இந்த புகாரை அளித்த பெண்ணின் உறவினர் எனக் கூறிக் கொண்டு வந்த அந்த நபர் முதலில் ஆசாராம் வழக்கில் என் பணியை பாராட்டினார்.

அதன் பிறகு அதைப் போலவே தன் பெண் உறவினரிடம் தலைமை நீதிபதி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி அதன் பிறகு எனக்கு மேலே கூறிய கோரிக்கையை விடுத்தார். அவர் பேச்சில் இருந்தே அவர் உச்சநீதிமன்றத்தில் உள்ள ஒரு தரகர் என்பதை நான் தெரிந்துக் கொண்டேன். இவரைப் போல் பல தரகர்கள் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகளை மாற்றி தருவதாக சொல்லி திரிவது வழக்கமாகும்.

நான் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததும் அவர் எனக்கு ரூ.50 லட்சம் ஊதியம் அளிப்பதாக கூறினர். அத்துடன் மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நான் இவர் கூறிய புகாரில் ஏராளமான ஓட்டைகள் உள்ளதையும் போலித் தகவல்கள் உள்ளதாலும் மீண்டும் மறுத்தேன். அப்போது அவர் எனக்கு ரூ.1.5 கோடி அளீப்பதாக கூறினர். கோபம் அடைந்த நான் அவரை எனது அலுவலகத்தை விட்டு விரட்டி அடித்தேன்.

அதன் பிறகு நான் விசாரித்தபோது டில்லியில் உள்ள நம்பிக்கையான வட்டாரங்கள் இந்த புகார் தலைமை நீதிபதி மீது சர்ச்சையை உண்டாக்கவும் அவரை ராஜினாமா செய்ய வைக்கவும் அளிக்கப்பட்ட போலி புகார் என்பதை உறுதி செய்தன. மேலும் என்னிடம் வந்த நபர் நான் நினைத்தபடி உச்சநீதிமன்ற தீர்ப்பை பணம் பெற்றுக் கொண்டு மாற்றி அமைக்க உதவும் தரகர் என்பதையும் நான் உறுதி செய்துக் கொண்டேன்.

மேலும் திறம்பட திட்டமிடப்பட்ட இந்த சர்ச்சைக்குறிய போலிப் புகரில் இருந்து நான் தப்பியதாக அப்போது எண்ணினேன். நான் இது குறித்து தெரிவிக்க தலைமை நீதிபதி இல்லத்துக்கு சென்றேன். ஆனால் நான் சென்ற போது அவர் இல்லத்தில் இல்லாததால் நான் சொல்ல முடிய்வில்லை. அத்துடன் இது குறித்து தகவல் அளிக்க உச்சநீதிமன்ற செய்தி தொடர்பாளர் மர்றும் மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் காமினி ஜெய்ச்வால் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தேன்.

ஆனால் தற்போது இந்த புகார் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. நான் மிகுந்த மன போராட்டத்துக்கு பின் இந்த புகார் குறித்த உண்மைகளை பேச முடிவு செய்தேன். அதனால் நான் இது குறித்த பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். இந்த புகாரின் பின்புலத்தில் பல தவறான போக்குடைய நீதிபதிகள், உச்சநீதிமன்ற தரகர்கள், ஊழல் அரசியல் வாதிகள் ஆகியோர் உள்ளனர்.

அவர்களின் முக்கிய நோக்கம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமானப்படுத்தி அவரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்பதே ஆகும். இதற்கு அவர் இனி விசாரிக்க உள்ள முக்கிய வழக்கால் இருக்கலாம் என எண்ணுகிறேன். நான் இது குறித்து இதுவரை நான் தலைமை நீதிபதியிடம் பேசவில்லை. இனியும் பேசப் போவதில்லை. நான் இது தவறு என சொன்னால் நான் எனது வழக்கறிஞர் தொழிலை விடவும் தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்