ஒருவரின் வாழ்க்கைத் துணை மரணத்திற்குப்பின் அவருடைய இதயத்துடிப்பு உயிருக்கு ஆபத்தை தரும்வகையில் மோசமாக செயல்படும் என ஓர் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டென்மார்க் மருத்துவத் துறையினர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
3849மேற்கத்தியர்களின் நவீனகால மரணத்திற்கு நான்கு முக்கிய காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. வாழ்க்கைத் துணையை மரணத்தால் இழக்கும்போது சுமார் 10 லட்சம் டேனிஷ்கார்ர்கள் ஓராண்டு முழுவதும் ஆபத்தான ஒழுங்கற்ற இதயத்துடிப்புடனே வாழ்கின்றனர். தங்கள் வாழ்க்கைத் துணையை எதிர்பாராதவிதமாக இழக்கும் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான் மிகுந்த இதயப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வாழ்க்கைத்துணையை மரணத்தில் பறிகொடுத்த 8 முதல் 14 ஆவது நாட்களில் இதயப்பாதிப்பு அதிகமாகி உயிருக்கும் அதிக ஆபத்து ஏற்படுகிறது.. அதன்பின்னர்  படிப்படியாக குறையத் தொடங்கும். இந்தப்பாதிப்பு கிட்டத்தட்ட ஓராண்டு வரை இதேநிலைமையில் தொடரும்.
வாழ்க்கைத்துணை இழப்புக்குப்பின்னர் வெகுவிரைவில் அவர்களுக்கும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.வாழ்க்கைத்துணையை இழந்த பின்னர் பல்வேறு நோய்களைச் சந்திக்கின்றனர்.குறிப்பாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகிறது.. இதிலிருந்து அவர்களை உடனடியாக மீட்பதும் சற்று சிரமமாகவே உள்ளது.
பொதுவாக இதயப்பாதிப்பு மற்றும் பக்கவாத நோய்களால் பாதிக்கப்படுபவர்களை ஆய்வு செய்தபோது அவர்களில் தங்களின் வாழ்க்கைத் துணையை பறிகொடுத்தவர்களின் இதயத்துடிப்புதான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இறப்பின் அபாயத்தை அதிக அளவில் எதிர்நோக்குபவர்களாக உள்ளனர்.
டென்மார்க்கில் 1995 முதல் 2014 ஆம் ஆண்டுவரை இதுதொடர்பாக ஒரு ஆய்வு நட்த்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி 88612 பேருக்கு இதயத்துடிப்பு தொடர்பான பரிசோதனை செய்யப்பட்ட்து. அவர்களில் 88,612 பேருக்கு எவ்வித இதய ஆபத்துகளும் இல்லை. ஏனெனில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 88,612 பேரும் தங்கள் வாழ்க்கைத் துணையை மரணத்தில் பறிகொடுத்து துயர அனுபவத்தை சந்திக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  வாழ்க்கத்துணையின் இழப்பு என்பது  மிகவும்  ஈடுசெய்யமுடியாத வாழ்க்கையின் மிகப்பெரும்  இழப்பாகவே கருதப்படுகிறது.
 
அப்படி இழப்புகளை சந்திக்கும் நபர்களுக்கு மனத் தளர்ச்சி போன்ற மன நோய் அறிகுறிகள் ஏற்படலாம்,. மற்றும் குறைவான தூக்கம். பசியின்மை. அதிக குடிப்பழக்கம் போன்றவை ஏற்படலாம், மேலும் உடற்பயிற்சி  செய்வதை நிறுத்துதல் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் பல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.