ண்டன்

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 398 ரன்கள் இலக்கை இங்கிலாந்து நிர்ணயம் செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. டாசில் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை ஒட்டி ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சில் களம் இறங்கியது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியின் மார்கன் தொடர்ந்து சிக்சர்களாக அடித்து வந்தார். அவர் 57 பந்துகளில் சென்சுரி அடித்து இங்கிலாந்து ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஆடிய ஜோ ரூட் 82 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு மார்கன் மீண்டும் ஒரு சிக்சர் அடித்தார். இது இந்த போட்டியில் அவர் அடித்த 17 ஆவது சிக்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்சர் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்னும் பெருமையை மார்கன் அடைந்தார். ஆனால் அடுத்த பந்தில் மார்கன் ஆட்டமிழந்தார். அவ்ர் மொத்தம் 148 ரன்கள் எடுட்ட்ருந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் ஓரளவே ரன்கள் எடுத்த போதிலும் மொயின் அலி ஓரளவு நன்கு விளையாடினார். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 397 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கி உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.