லக்னோ,  

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி காட்சி தோல்வி அடைந்ததற்கு அந்தக் கட்சி உடைந்ததுதான் காரணம் என கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக முலாயம் சிங் யாதவும், மாநில தலைவராக அவர் தம்பி சிவபால் சிங்கும் இருந்தனர். முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக  இருந்தார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அகிலேஷுக்கும், சிவ்பால் சிங்கிற்கும் இடையே பொதுமேடைகளில் நிகழ்ந்ததை உத்தரபிரதேச மக்கள் கவனிக்கத் தவறவில்லை.

இதேபோல் சிவபால் சிங் தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதும் கட்சித்தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், கோபமடைந்த அகிலேஷ் தனியாக ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதுதான்  முலாயமுக்கும், அகிலேஷுக்கும் இடையே மோதல் அதிகரிக்க காரணமாயிருந்தது.

அகிலேஷும், ராம்கோபால் யாதவும் இணைந்து லக்னோவில் கட்சியின் தேசிய செயற்குழுவைக் கூட்டினர். இதில் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங்கை நீக்கிவிட்டு அகிலேஷ் நியமிக்கப்பட்டார். ராம்கோபால் யாதவ் கூட்டிய தேசிய செயற்குழு செல்லாது என்று முலாயம் அறிவித்தார். அதே சமயம், சிவபால் சிங்கிற்கு பதிலாக, நரேஷ் உத்தமை மாநில தலைவராக அகிலேஷ் நியமித்தார்.

தேர்தல் நேரத்தில் இதுபோன்று நிகழ்ந்த ஏராளமான  களேபரத்தால் சமாஜ்வாதி கட்சி மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்தனர். காங்கிரசை கூட்டணியில் சேர்த்ததும் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.