e

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  பொதுச் செயலர், ரவிகுமார், பிரபாகரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.    அவர் தனது முகநூல் பக்கத்தில், “தி இந்து நாளேட்டின் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.

மதவாத உதிரிகளின் வன்முறை நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நேரம் இது. பாதிக்கப்பட்டவர்கள்கூட (victims) தமது எதிர்ப்பு வடிவம் மதவாத சக்திகளுக்கு உதவிவிடக்கூடாது என்பதில் இப்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.”  என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்,  பிரபாகரனின் செயலைப் பாராட்டி இருக்கிறார்.   “திரு.நாராயணன் அவர்களை அடித்தது தவறு தான்!” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

“இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டது குறித்து இலங்கை கூட வருந்தி இருக்கிறது. அதுவும் தமிழகத்தில் தாக்கப்பட்டது தான் அவமானமாம் ‘இந்து ராம்’கள் கவலை கொள்கின்றனர். உண்மையிலேயே நாராயணன் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதுதான். இப்படியா தாக்குவான் அந்த அறந்தாங்கி தமிழன்? வெட்கமாக இருக்கிறது.

லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைகொன்றொழிக்க உதவிய படுபாவி நாராயணனை லேசாக செறுப்பால் அடித்தது தவறு தான். லட்சக்கணக்கான மக்களின் உயிரைக்குடிக்க ஆலோசனை சொன்ன நாராயணனை சும்மா அடித்தது தவறு தான். லட்சக்கணக்கான ஈழத்து மக்களின் குருதி இன்னும் காயவில்லை அதற்குள் தமிழகத்திற்கு வந்த நாராயணனை நோகாமல் அடித்தது தவறு தான். பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தது மாபெரும் தவறு தான்.

இனி அந்த தவறு நடக்க கூடாது. அறந்தாங்கி தம்பி பிரபாகரன் இப்போது காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதாக தகவல். நையப்புடைக்கப்பட வேண்டியவன் தில்லியில்… நமது தம்பியோ சிறையில்.. இனி இந்த மாதிரி சின்ன தவறுகள் செய்யக்கூடாது தான். இந்த நேரத்தில் புரட்சிக்கவிஞர் தான் ஞாபகம் வருகிறார்,

‘கொலை வாளினை எடடா மிக கொடியோர் செயல் அறவே…’
வன்னி அரசு.” – இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இரு முக்கிய பிரமுகர்கள் வெவ்வேறு விதமான கருத்தை வெளிப்படுத்தி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.