டில்லி:

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 55 ரன் வித்தியாசத்தில் டெல்லி அசத்தல் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின்  26-வது ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

டெல்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய டில்லி அணி 219 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணியின் வெற்றி 220 ரன்களை இலக்காக வைத்தது.

டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் டெல்லி அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மன்றோ போல்டாகி வெளியேறினார்.  அதையடுத்து  ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. ப்ரித்வி ஷா 44 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகி வெளியேற ,  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

அதைத்தொடர்ந்து கொல்கத்தா அணி மட்டையை பிடித்தது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணமானது.

தொடக்க ஆட்டக்காரர்களாக  கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். ஆனால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கிறிஸ் லின் 5 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் பரிதாபமாக வெளியேறி னார். தொடந்து இறங்கிய உத்தப்பா 1 ரன் எடுத்த நிலையில் தலையை குனிந்துகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார். தொடர்ந்து டிரெண்ட் போல்ட், நரேன் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெளியேற கொல்கத்தா அணி ஆட்டம் கண்டது.

அதைடுத்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டையை பிடித்தார். ஆவேசமாக விளையாடிய தினேஷ்  18 பந்தில் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆக கொல்த்தா அணி 9.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய சுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி பரபரப்பாக விளையாடி னர். டெல்லி பவுலர்களின் பந்துக்களை சரமாரியாக அடித்து ரன்களை வேகமாக உயர்த்தினர்.

இந்நிலையில், 37 ரன்னில் கில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து இறங்கிய  சிவம் மாவி டக் அவுட் ஆகி அவரும் வெளியேறினார்.

மிகவும் எதிர்பார்ப்புடன் நின்று ஆடிய ரஸசும்  44 ரன்களில் அவேஸ் கான் பந்தில் போல்ட் ஆனார்.  இதன் காரணமாக கொல்கத்தா அணி திணறியது. தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் களத்தில் சோபிக்க முடியாததால்,  கொல்கத்தா அணி  20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் காரணமாக டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது.டெல்லி அணி தரப்பில் போல்ட், மேக்ஸ்வெல், அவேஸ் கான், மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணிக்கு கேப்டனாக முதன்முதலாக  ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாக டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டார்.