டெஹ்ரான்:

ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்காதான் பின்னணியில் இருந்து இயக்குகிறது  என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்த ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் நாட்டு உயர் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில், “இஸ்லாமிய நாடுகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தவே அமெரிக்கா ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கி வழி நடத்தி வருகிறது. அந்த பயங்கரவாத இயக்கததின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது.

சமீபகாலமாக ஈரானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருக்கிறது. இதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன” என்று ஈரான் நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே இது போன்ற குற்றச்சாட்டை அமெரிக்கா மீது சில அமைப்புகள் தெரிவித்து வருகின்றன என்றாலும் ஒரு நாடு வெளிப்படையாக  இப்படி குற்றம் சாட்டுவது இதுவே முதல் முறை. தவிர ஆதாரம் இருப்பதாக தெரிவித்திருப்பதும் முதல் முறை.