sr

ஜெனிவா:

லங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடந்த இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகள் அவையில் இன்றுதாக்கல் செய்யப்படுகிறது.

அதில், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டும் என்றகோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இலங்கை அரசே போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்கா கூறிவருகிறது. இதற்கிடையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த அடுதத வீடியோவை சேனல் 4 வெளியிட்டது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை, இன்று பிற்பகல் 3 மணிக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல்-உசேன்‌ தாக்கல் செய்ய இருக்கிறார். அதோடு, தனது பரிந்துரைகளையும் அவர் சமர்ப்பிக்க உள்ள‌தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, மூன்று நாள் விஜயமாக இந்தியா வந்துள்ளார். பிரதமரை சந்தித்து பேசினார். இந்தியா – இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.

ஆகவே,  இலங்கை  மீதான  ஐநா விசாரணையில், இந்தியாவின் நிலைபாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.