ஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.

வைரமுத்து – ஷங்கர்

பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு  ராகுல் ராஜ் இசையமைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என  நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

ஏ.ஆர்.ரகுமான் இசையை வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். படத்தின் டீசரை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து,  பேசும்போது, “இதுவொரு சராசரி விழா அல்ல. பெரிய சரித்திர நிகழ்வாகும்.  ரஜினி,   அமிதாப்,  ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி போன்றவர்கள்,  இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்களாக விளங்குபவர்கள்.

அப்படிப்பட்ட ரசூல் பூக்குட்டி, ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்றுவிடாமல், தன் தாய் மண்ணின் கலாச்சாரம், பண்பாடு குறித்து படத்தை அளித்திருக்கிறார்” என்ற வைரமுத்து இசை குறித்து பேச ஆரம்பித்தார்.

“ஒலிதான் மொழி. சத்தம் எல்லாமே சங்கீதம்” என்றார்.

ஒலிக்கும் சத்தத்துக்குமான வேறுபாட்டை இன்னும் கொஞ்சம் அவர் விளக்கியிருக்கலாமே என்று கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

அடுத்து பேசிய ஷங்கர், “அந்நியன்’ படத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை படமாக்கியிருந்தேன். அது  எனக்கு கிடைத்த மிக அற்புதமான அனுபவம்.

இந்தப் படத்தில்  பூரம் திருவிழாவை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள்.10 லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் விழாவில், 300 கலைஞர்கள் 3 மணி நேரம் இசை நிகழ்த்துவார்கள். முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அதனைக் காட்சியாக வைத்திருப்பேன்” என்றார்.