kadalure
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் சீமான் நேற்று கடலூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’ இந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மற்றவர்களுக்கு இது வழக்கமான தேர்தல், எங்களுக்கு அடிப்படை தேசிய இனத்தின் உரிமை மீட்சிப்போர். மக்களை நம்பி, மக்களின் உரிமைக்காக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். தானேபுயல், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மண்ணில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் பணமா? தமிழர் என்கிற இனமா? அந்த இனத்தின் மானமா? என்கிற போட்டி நிலவ இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறந்த மக்களாட்சியை தருவோம். புதிய கட்சி தொடங்கியதே திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத்தான். அதனால் தான் யார் தலைமையையும் ஏற்கவில்லை. தமிழர்களே ஆள வேண்டும்’’என்று கூறினார்.