டில்லி

லங்கையின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அண்மையில் இலங்கையின் புதிய அதிபராக அண்மையில் கோத்தபாய ராஜபக்சே பொறுப்பேற்றார்.  இந்தியப் பிரதம ர்மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.    அத்துடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று கோத்தபாயவை சந்தித்துப் பேசியபோது இந்தியாவுக்கு வருகை தர முறைப்படி  அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுத் தாம் இந்தியா வருவதாக கோத்தபாய அறிவித்தார். கோத்தபாயவின் இந்திய வருகைக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர்  ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என்பதால் கோத்தபாயவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது எனத் தமிழக தலைவர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.   அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ தலைமையில் மதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மாலை 2 நாட்கள் பயணமாக கோத்தபாய ராஜபக்சே டில்லிக்குக் கிளம்பி உள்ளார்.    இந்தியாவுக்கு வருகை தரும் கோத்தபாய ராஜபக்சே தனது டிவிட்டரில், “நான் எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குக் கிளம்புகிறேன்.   பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுடன் இணைந்து இருநாட்டு உறவைப் பலப்படுத்த உள்ளேன்” எனப் பதிந்துள்ளார்.