பெங்களூரு,  

அவுரங்காபாத் – ஐதராபாத் இடையிலான பயணிகள் ரெயில் இன்று காலை  தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.  அதிகாலை 4 மணியளவில்  கர்நாடக மாநிலம் பால்கி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கம் மற்றும் கால்காபூர் கிராமங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த ரயில் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ரெயில் என்ஜின் மற்றும் ரெயிலின் இரு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி சென்றது. என்ஜின் கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் 2 பயணிகளுக்கு மட்டும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது,  அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பால்கி வட்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து நிகழ்ந்த மார்க்கத்தில் ரெயில்வே சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

கவிழ்ந்து கிடக்கும் என்ஜின் மற்றும் பெட்டிகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.