கல்யாண்ராமன் - தமிழிசை
கல்யாண்ராமன் – தமிழிசை

குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்கும் புலவர்கள்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி ஆபாசமா, எழுதியே முகநூல்ல “பேர்” வாங்கற “புலவர்ஸ்”  நெறைய பேர் இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தரான “இந்துத்துவா” கல்யாண்ராமன், நபிகள் நாயகம் பத்தி கீழ்த்தரமா எழுதப்போக, புழல்ல புடிச்சு போட்டாங்க.
“மாத்து மதத்தவங்களையும், நாத்திகர்களையும் இந்த கல்யாண்ராமன், ரொம்ப மோசமா எழுதிட்டிருந்தாரு… அந்த ஆளை புடிச்சு உள்ளே போட்டது ரொம்ப சரி”னு பலபேரு சந்தோசப்படுறாங்க. வேற சிலபேரு, “ஐ சப்போர்ட் கல்யாண்ராமன்”னு  முகநூல்ல போட்டோ போட ஆரம்பிச்சிட்டாங்க..
இந்த நிலையில, புழல் சிறைக்கு போயி, அவர சந்திச்சு ஆறுதல் சொல்லிட்டு வந்திருக்காரு,  பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
இது பலபேருக்கு ஆச்சரியமா இருந்துச்சு. “தமிழிசை ரொம்ப  நாகரீகமாக அரசியல்வாதி.  பண்பாடோட  பேசறவர்.   தன்னை கடுமையாக விமர்சித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து செல்லி நெகிழவச்சவர்… அப்படிப்பட்டவர், இந்த கல்யாண்ராமனை போயி சந்திக்கலாமா..”னு  பலபேரு கேட்கிறாரங்க.
அதை நான் தமிழிசை கிட்டயே கேட்டேன். அதுக்கு அவங்க, “அவன்  மோசமா எழுதறதா பலபேரு சொல்லியிருக்காங்க. என்னைக்கூட,  “அடிமைப்பெண்” அப்படினு கேலியா எழுதினானாம். ஜாதி கண்ணோட்டத்துல அவன் எழுதறதாவும் சொன்னங்க. ஆனா நான் கல்யாண்ராமன் முகநூல் பக்கத்தை  பார்க்கிறதே இல்லைப்பா! அதே நேரம் எந்த மதத்துக்காரங்களை யார் கீழ்த்தரமா எழுதினாலும் தப்புதான். அதை நான் ஆதரிக்கலை”னு சொன்னாங்க.

ரவுண்ட்ஸ்பாய்
ரவுண்ட்ஸ்பாய்

“அப்புறம் ஏன் புழல் சிறைக்கு போயி, அவரை சந்திச்சீங்க”னு கேட்டேன்.
அதுக்கு தமிழிசை, “சித்தாந்த அடிப்படையில எங்க சார்பானவர் விமர்சிக்கப்படும்போது அல்லது பிரச்சினையில சிக்கியிருக்கும்போது ஆதரவளிக்கிறது என் கடமை.  மறுபடி சொல்றேன்.. கல்யாண்ராமன் என்ன எழுதினான்னு எனக்குத் தெரியாது. அதை நான் சரின்னோ தப்புன்னோ சொல்லலை.
ஆனா, அவன் கைது செய்யப்பட்ட விதத்தை நான் கண்டிக்கிறேன்.  குறிப்பிட்ட மதத்துக்காரங்க அவனை டார்கெட் பண்றதையும் கண்டிக்கிறேன். அது என் கடமை”னு சொன்னாங்க, தமிழிசை!
என்னதான் அந்த கடமை உணர்ச்சியோ, போங்க!