ண்டிகர்.

ஞ்சாப் மாநிலத்தின் நிதி அமைச்சர் மன்ப்ரீத் சிங் தற்போதைய நிலையில் கல்விக்கான செலவுக்கே முதலிடம், புனிதப் பயண மானியம் தேவையற்றது எனக் கூறியுள்ளார்.

பஞ்சாப் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மன்ப்ரீத் சிங் கூறியதாவது:

கடந்த சிரோன்மணி அகாலிதள் – பா ஜ க கூட்டணி அரசில் புனிதப் பயணத்துக்கான மானியத் திட்டம் தொடங்கப் பட்டது.  புனிதப் பயணத்துக்காக பல பேருந்துகள் விடப்பட்டன.  சிந்தபூரணிக்கு 484, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சலசாருக்கு 1191, அனந்தபூர் சாஹிபுக்கு 337, அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு 6481, பாட்னா சாகிபுக்கு 223 என பேருந்துகளும், ரெய்ல் சர்வீஸ்களில் நந்தலால் சாகிபுக்கு 87, வாரணாசிக்கு 18 மற்றும் அஜ்மீருக்கு 3 என விசேஷ ரெயில்கள் விடப்பட்டன.  புனிதப் பயண மானியமாக ரூ.139.38 கோடிகள் செலவிடப்பட்டன.

பஞ்சாப் பல்கலைக்கழகம், பாபா ஃபரித் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவை பணமின்றி தவிக்கின்றன.  இதில் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு ரூ 40 கோடி உடனடித்தேவையாக உள்ளது.  காபுர்தலா சைனிக் பள்ளிக்கு கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு நிதி உதவியும் தரப்படவில்லை.

இப்படி கல்வி நிறுவனங்கள் பணமின்றி வாடும் போது, புனிதப் பயண மானியம் அவசியமில்லை.  இந்த அரசில் கல்விக்கான செலவுக்குத்தான் முதலிடம் கொடுக்கப்படும்.  இனி புனிதப் பயணத்துக்கான மானியம் அடியோடு நிறுத்தப்படும்

இவ்வாறு மன்ப்ரீத் சிங் கூறினார்.