700_1455262395
பேங்காக்:
போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்வது பலருக்கு வாடிக்கை. ஆனால் போதையில் அறுவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஒரு நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பாய் வில்சன் என்ற பெண் பணி நிமித்தமாக துபாயில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமானத்தில் சென்றார். அங்கு ஒரு மாத காலம் தங்கி விட்டு பின்னர் ஆஸ்திரேலியா செல்வது அவரது திட்டம்.
தாய்லாந்துக்கு விமானத்தில் சென்ற போது மது அருந்தியுள்ளார். போதையில் கழிப்பிடம் சென்றார். அப்போது கழிப்பிடத்தில் பயன்படுத்தப்படும் டிஸ்யூ பேப்பர் இல்லை. இதனால், போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், பாஸ்போர்ட்டில் இருந்து 2, 3 பக்கங்களை கிழித்து டிஸ்யூ பேப்பராக பயன்படுத்தி துடைத்து எறிந்துள்ளார்.
அந்த பாஸ்போர்ட்டை கொண்டு வந்து தாய்லாந்து விமானநிலைய அதிகாரிகளிடம் சோதனையின் போது கொடுத்தார். இதை வாங்கி பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். என்ன நடந்தது? என்று கேட்டனர் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு நடந்தது சூசகமாக புரிந்துவிட்டது. உடனடியாக அந்த பெண்ணை நாட்டிற்கு நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வந்த வழியாகவே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பிவிட்டனர். பயணிகள் போதையில் வருவது சகஜம் தான். ஆனால் இது உச்சக்கட்ட அறுவறுக்கத்தக்க விஷயம் தான். இதனால் அந்த பெண் அவசர பாஸ்போர்ட் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை வேறு ஏதேனும் அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்….