ஐதராபாத்:

கவுரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகள்தான். ராவணன் 24 விமானங்களை வைத்திருந்தான். இப்படி சாதாரண நபர் சொன்னால் சிரிப்பார்கள். ஆனால் சொன்னதோ…ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்றால்..

ஐதராபாத்தில் வெள்ளிக்கிழமை நடந்த இந்திய விஞ்ஞான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வரராவ் இவ்வாறு தொடர்கிறார்…

கவுரவர்கள் குறுத்தணு (ஸ்டெம் செல்) முறையிலும்,சோதனைக் குழாய் தொழில் நுட்பத்தில் பிறந்தவர்கள்.

ஏவுகணைகளை ஏவுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முன்னோடியாக இருந்துள்ளது. விஷ்ணுவின் பத்து அவதாரத்தை ஒட்டியே சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை வருகிறது. ராமன் அப்போதே ஆஸ்த்ரா, சாஸ்த்ரா ஆகிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக புராணம் சொல்கிறது. விஷ்ணு பரமாத்மா இலக்கை அடைய Ôசுதர்தான்Õ சக்கரத்தை ஏவினார்.தாக்கிய பிறகு அவர்கள் திரும்பி வந்தது. ஏவுகணைகளை விடுவது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் ஏவுகணைகளை விட்டுள்ளோம் என்பதையே இது காட்டுகிறது. ராவணன் புஷ்பக விமானம் வைத்திருந்ததாக ராமாயணம் சொல்கிறது. புஷ்பக விமானம் மட்டுமல்ல, அவனிடம் 24 வகையான விமானங்கள் இருந்திருக்கின்றன. வாழ்க்கை நீரிலிருந்துதான் தொடங்குகிறது என டால்ஸ்டாய் கூறுகிறார்.

விஷ்ணு பராமாத்மாவின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் (மீன்) நீருக்குள் இருந்துதான் தொடங்குகிறது. இரண்டாவது அவதாரம் ஆமை வடிவமும், மூன்றாவது அவதாரம் கொம்புள்ள மனித தலையும், நான்காவது அவதாரம் சிங்கத்தின் முகத்தைக் கொண்ட மனித உருவம் நரசிம்ம அவதாரமாக உள்ளது. ஐந்தாவது வாமன அவதாரம்.

கவுரவர்களின் தாயார் காந்தாரிக்கு 100 குழந்தைகள் இருந்தன என்றால் நம்ப முடிகிறதா? இது சாத்தியமா? ஆனால் சோதனைக் குழாய் குழந்தை மூலம் இது இப்போது சாத்தியமாகிறது. 100 முட்டைகளை 100 பானையில் வைத்து இனப்பெருக்கம் செய்தால், அதுதான் சோதனைக் குழாய் குழந்தை. குறுத்தணு (ஸ்டெம் செல்) குறித்த ஆராய்ச்சி நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இன்றும் நாம் குறுத்தணு ஆராய்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.