புதுடெல்லி:

கடந்த ஆண்டில் காபி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 7.36 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு  உள்ளது.

காபி வாரியத்தின் கணக்கின்படி, 2018 ஆம் ஆண்டில் காபி ஏற்றுமதி, 5,770.48 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இது 6,091 கோடி. இத்தாலி உட்பட சில நாடுகளுக்கு 76,437.56 டன், ஜெர்மனி (28,582 டன்) மற்றும் ரஷ்யாவுக்கு (21,397 டன்) இந்தியாவிலிருந்து காபி ஏற்றுமதி செய்யப்பட்டது.

வாரியத்தின் சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, 2018-ம் ஆண்டு 3,50,280 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டது, முந்தைய ஆண்டில் 3,78,119 டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
ரோபஸ்டா எனும் காபி விதைகள் ஏற்றுமதி 2017-ல் 2,18,463 டன்னாக இருந்தது. 2018-ம் ஆண்டு 1,79,903 டன் அளவுக்கு சரிவு ஏற்பட்டது. சரிவு சதவீதம் 17.65 ஆகும்.

எனினும், மதிப்பு அடிப்படையில் ஏற்றுமதி இருந்தது அராபிகா காபி வகைகள் ஏற்றுமதி 2018 இல் டன்னுக்கு சற்று் அதிகமாக இருந்தது. வரும் செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதியின் அளவு 3,16,000 டன்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.காபி ஏற்றுமதியில், ஆசியாவில் முன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.