images (47)

வாஷிங்டன்:
பனி குவியலில் தேங்கி நின்ற காரின் உள்ளே கார்பன்மோனாக்சைடு பரவி உள்ளே இருந்த தாயும், மகனும் மூச்சு திணறி இறந்தனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெலிக்ஸ் பொனிலோ. இவரது ஷாஷல்யின் ரோசா மற்றும் இவர்களது இரு குழந்தைகளுடன் வார இறுதி கொண்டாடட்டத்திற்காக கிழக்கு கடற்கரை பகுதிக்கு காரில் சென்றனர்.
கடந்த சில தினங்களாக அங்கு பனிப் பொழிவு அதிகளவில் உள்ளது. காரை நிறுத்திவிட்டு அந்த குடும்பத்தினர் வெளியில் சென்று விட்டு திரும்பி வந்தனர். காரின் பெரும்பாலான பகுதி பனிக் குவியலுக்குள் சிக்கியிருந்தது. அதை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தாயும், ஒரு வயது மகளும், 3 வயது மகனும் காரின் உள்ளே அமர்ந்து கொண்டனர். கார் இன்ஜினை இயங்க செய்துவிட்டு, ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டார் பெலிக்ஸ். பின்னர் அவர் கீழே இறந்த பனிக் குவியல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் இருந்த பனிக்குவியலில் இருந்து கார்பன் மோனாக்ஸைட் காரின் உள்ளே பரவியது.
இதில் காரின் உள்ளே இருந்த 3 பேரும் மயங்கினர். சிறிது நேரத்தில் காரை திறந்து பார்த்த பெலிக்ஸ், அலறியடித்துக் கொண்டு 3 பேரையும் சாலையில் வந்த இதர வாகனங்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் தாயும், மகளும் இறந்துவிட்டனர். மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்.
மனைவியையும், மகளையும் இறந்த பெலிக்ஸ் கதறி அழுத காட்சி காண்போரின் மனதை கலங்கச் செய்தது.