லிகார்

மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியாக அணிவகுத்துச் சென்றதற்காக 1,200 அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 23 ஆம் தேதி அன்று குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அலிகார் முஸ்லிம் பலகலைக்கழக மாணவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.   அந்த போராட்டத்தில் அவர்கள் அமைதியாக  மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக அணி வகுத்துச் சென்றுள்ளனர்.

ஆயினும் அவர்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.   அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 ஐ மீறியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 மற்றும் 341 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக மாணவர்கள் நடத்திய இந்த அணிவகுப்பு அமைதியானது என்றாலும் நான்குக்கும் மேற்பட்டவர்கள் கூட அனுமதிக்காத விதி நடைமுறையில் உள்ளதால் இது சட்ட மீறல் ஆகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.