தாத்ரி

டந்த 2015 ஆம் ஆண்டு கும்பலால் கொல்லப்பட்ட முகமது அக்லாக் குடும்பத்தினர் வெளியூர் சென்று வாக்களித்துள்ளனர்

கடந்த 2015 ஆம் ஆண்டு பிஷாரா என்னும் ஊரில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அக்லாக் என்பவர் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு மரணம் அடைந்தார்.  இந்த ஊர் மக்கள் அதிலிருந்து மீடியாவுக்கு தலையை காட்டாமல் வாழ்ந்து வருகின்றனர்.   குறிப்பாக கொல்லப்பட்ட முகமது அக்லாக் குடும்பத்தினர் அங்கிருந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

கொல்லப்பட்ட முகமத் அக்லாக்கின் மூத்த சகோதரர் ஜான் முகமது மற்றுமுள்ள குடும்பத்தினர் தற்போது தாத்ரி பகுதியில் வசித்து வருகின்றனர்.   நேற்று நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் அவர்கள் வாக்களித்துள்ளனர்.    இது தவிர முகமது அக்லாக்கின் மகன்கள் உள்ளிட்டோர் டில்லிக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

ஜான் முகமது, “எனது சகோதரனின் கொலை சம்பவத்துக்குப் பிறகு நாங்கள் 40 வருடங்களாக வாழ்ந்து வந்த எங்கள் ஊரை விட்டு வெளியேறி இங்கு வசிக்க நேர்ந்துள்ளது.   நான் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப வாழ பழகிக் கொண்டு வருகிறேன்.   என் வாழ்நாளில் முதல் முறையாக வெளியூருக்கு வந்து வாக்களித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். டில்லியில்  வசிப்பவர்கள் வரும் மே மாதம் 12 ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.