new

ன்று அதிகாலையிலேயே அலைபேசினார், நண்பர் அரவிந்தன் அலைபேசினார். “ரெடியா இரு… கொஞ்ச நேரத்தில வர்றேன்..பெசன்ட் நகர் பீச் போகலாம்..” என்றார்.

துணி ஏற்றுமதி பிஸினஸ் செய்கிறார்.  மாதத்தில் பாதிநாள் ஃபாரின் டூரில் இருப்பார்.  பத்துநாள் சென்னையில் இருப்பார்.  டிசம்பர் குளிரில் பீச்சில் வாக்கிங் போகவது அவருக்கு பிடித்தமான விசயம்.

நானும் ஒரு கலா ரசிகன் என்று  உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லையே! ஆகவே  நானும் ஓகே சொன்னேன்.

சொன்னபடியே கொஞ்ச நேரத்தில் தனது ஹோண்டா ஸிட்டி  பறந்துவந்தார்.

திருவான்மியூரை கார் நெருங்க நெருங்க.. சாலையின் இரு புறத்திலும் அ.தி.முகவினரின் பிரம்மாண்ட பேனர்கள் வரிசை கட்டி நிற்பதை பார்க்க முடிந்தது.  “அம்மா.. தாயே…” என்றதில் ஆரம்பித்து, இன்னும் ஏதேதோ புகழ்மாலை சூடியிருந்தார்கள் ஜெயலலிதாவுக்கு.

“என்ன விசயம் என்றார் அரவிந்தன்…”

“திருவான்மியூரில்  ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான மைதானத்தில்தானே  நாளை அ.தி.மு.க. பொதுக்குழு நடக்கிறது. அதான் பேனர் அணிவகுப்பு” என்றேன்.

“ஓ…  ஆனால் எந்த பேனரிலும் எம்.ஜி.ஆர் படமோ, பெயரோ இருந்ததாக தெரியவில்லையே..” என்றார்.

“அதான் அரசியல்..” என்றேன் நான்.

a

 

ஜெயந்தி தியேட்டர் திருப்பத்தில் இடது புறம் திரும்பி, சீரான வேகத்தில் செல்ல ஆரம்பத்தது கார்.  எம்.ஜி. ரோடு சிக்னலில் சிகப்பு ஒளிரவே, காரை நிறுத்தினார் அரவிந்தன்.

வலது புறம் பார்த்தவர், அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலையைப் பார்த்ததும், காரை ஓரமாக நிறுத்தி இறங்கினார். நானும் இறங்கினேன்.

சாலை ஓரத்தில் பரிதாபமாக இருந்தது எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை.  முகத்தில் சில இடங்களில் பெயிண்ட் போயிருந்தது. எப்போதோ போடப்பட்ட மாலை ஒன்று, மழையிலும் வெயிலிலும் வாடி வதங்கிக் கிடந்தது.

ராமண்ணா
ராமண்ணா

சிலை திறப்பு விழா குறித்த எழுதப்பட்டிருந்த கல்வெட்டில், பெரும்பாலான விவரங்கள் அழிந்துபோயிருந்தன. மதூசூதனன், ஜெயக்குமார், செங்கோட்டையன் என்று சில பெர்களை மட்டும் படிக்க முடிந்தது.

“எவ்வளவு செல்வாக்குடன் வாழ்ந்தவர் எம்.ஜியார்.! இன்றளவும் மக்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள்! அ.தி.மு.க.வை உருவாக்கி இன்று ஜெயலிலதா முதல்வராக இருக்கவும் அவர்தானே காரணம்!

பொதுக்குழு நடக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் இந்த சிலையை இப்போதாவது வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் அ.தி.மு.கவினர் வைக்கக்கூடாதா..இது என்ன அரசியலோ” என்று ஆதங்கப்பட்டார் அரவிந்தன்.

“இதுவும் அரசில்தான்.. வாங்க புறப்படலாம்” என்றேன் நான்.