images (38)
மக்கள் கலைஞர், என்று புகழப்படும் தோழர் கே.ஏ.குணசேகரன் இன்று காலமானார். நாடகவியலாளர்,தலித்திய அரங்கியற்செயற்பாடுகளை முன்னெடுத்தவர்,பாடகர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் கே.ஏ. குணசேகரன்.
குறிப்பாக மக்களியக்க மேடைப் ப்பாடல்களுக்கு புத்துயிரும் புதிய பரிமாணமும் அளித்த முன்னோடி, ஆவார். புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறையின் புல முதன்மையராக பணியாற்றியவர்.
ஒட்டுக்கப்பட்டவரின் குரலாக ஓங்கி எழுந்தது இவரது படைப்புகள்.
இவர் முழங்கிய வரிகள் ஒவ்வொன்றும் வலி மிகுந்தது. ஆம்.. ஒடுக்கப்பட்டோரின் வலியைச் சொன்ன வலிமையான வரிகள்.
சிறு உதாரணம்:
“`சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப் போனீங்க’”
அந்த பாடலைக் கேட்க…