பீஜிங்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தாலும் மீண்டும் பாதிப்பு அபாயம் உள்ளதாக ஒரு மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் உள்ளது.  இவ்வாறு தொற்று ஏற்படுபவர்களுக்கு நியுமோனியா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.  இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை

இந்த நோய் தாக்கம் குறித்து நேற்று சீனாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தது.  சீனாவில் தேசிய சுகாதார ஆணையம் நடத்திய இந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த வைரஸ் தாக்குதல் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

அப்போது அங்கு இருந்த ஒரு மருத்துவ நிபுணர் இந்த வைரசால் ஏற்படும் நியுமோனியாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும்  இதே வைரஸ் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.