Lawyers

டெல்லி:
சட்டத்தில் பட்டம் மட்டும் பெற்றுவிட்டால் வக்கீலாக ஆகிவிடமுடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாகூர் கூறினார்.
சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வக்கீல் தொழிலுக்குள் நுழைவதற்கு முன் அகில இந்திய பார் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த தேர்தவை இந்திய பார் கவுன்சில் நடத்த திட்டமிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர், நீதிபதி லலித் ஆகியோர் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தாகூர் கூறியதாவது:
வக்கீலாக பணிபுரிவது என்பது அவர்களது உரிமை. அந்த உரிமை மறுக்கவில்லை. அதே சமயம் இந்த தகுதி தேர்வை கண்டு தயக்கமும் கூடாது. இந்த தேர்வு சட்டத்துக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறையை வலுவாக்க வேண்டிய அவசியம் குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. தற்போது கறுப்பு கோட் அணிந்த பலர் வேறு தொழில்களில் ஈடுபடுவதை காண முடிகிறது. அதனால் இது போன்ற தேர்வுகள் தொழிலில் நுழைவோருக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
 தற்போது வக்கீல்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு வருவதை காணமுடிகிறது.  பலருக்கு அடிப்படையே தெரியவில்லை. ஏற்கனவே 2 மில்லியன் வக்கீல்கள் உள்ளனர். ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் புதிதாக வருகிறார்கள். இதில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து வருகிறார்கள். மீதமுள்ள 58 ஆயிரம் பேர் நிலை என்ன?. அவர்களது திறமை, தகுதி அடிப்படையில் கூடுதல் பலம் அவர்களுக்கு தேவை. சட்டத்தில் பட்டம் மட்டும் பெற்றுவிட்டால், வக்கீல் ஆகிவிட முடியாது.
அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று, நுழைவு தேர்வு மூலமே டாக்டர்கள், இன்ஜியர்கள் உருவாகிறார்கள். ஆனால் சட்ட தொழிலில் இவ்வாறு இல்லை. ஒவ்வொரு சட்ட பட்டம் பெற்றவர்களும் வக்கீலாகிவிடுகிறார்கள். சட்டத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இது போன்று சுதந்திரமான சவாரியை மேற் கொள்ளக் கூடாது. அரை வேக்காடு வக்கீல்கள் தேவையில்லை.
இந்த நாட்டில் வக்கீல்கள் பங்கு முக்கியமானது. அதை சிறுமை படுத்த வேண்டாம். நீதி நிர்வாகத்தில் வக்கீல்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இத்தகைய நடைமுறையை புணரமைத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனினும், வக்கீல்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க விதிமுறை தேவை. ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் சட்ட பட்டதாரிகள்  வக்கீல் பணியை தொடர முடியும் என்பது நீதிமன்றத்தில் வக்கீல் ஆஜராகலாம் என்ற உரிமையய பறிக்கும் செயலாகும். தேர்வு நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், வக்கீல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரை தேர்வை இந்திய பார் கவுன்சில் நிறுத்தி வைக்க முடியுமா?.
இவ்வாறு அவர் பேசினார். வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.