திருவனந்தபுரம்:

சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாஜக ஆதரவுடன் சபரிமலை கர்மா சமிதி நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக ஆதரவு அமைப்பான சபரிமலை கர்மா சமிதி வியாழக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் பொதுமக்கள் இந்த அழைப்பை முற்றிலும் புறக்கணித்தனர். வணிக நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை திறந்திருந்தன.
கடையை அடைக்குமாறு கூறி திரண்டு வந்த அவர்களை பொதுமக்களே தடுத்து நிறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே மல்லாபுரம் மாவட்டம் எடப்பல் என்ற இடத்தில் கடைகளை அடைக்கக் கோரி இரு சக்கர வாகனத்தில் வந்த சபரிமலை கர்மா சமிதி ஆதரவாளர்கள் சிலரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கினர். அவர்களது வாகனங்களை கைப்பற்றினர்.
மற்றொரு இடத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களை வெளியேறுமாறு சிலர் எச்சரித்தனர். சில இடங்களில் போராட்டக் காரர்களை பொதுமக்களும் போலீஸாரும் சேர்ந்தே தாக்குகின்றனர்.
இதற்கு அந்த பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு நாள் சம்பளத்தை நீ தருவாயா என அவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய பெண்கள், பணியை நிறுத்த முடியாது, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றனர். இந்த வாக்குவாத வீடியோவும் பரபரப்பாகிக் கொாண்டிருக்கிறது.