கருணையை வேண்டி நிற்கும் ராஜையாவும் அவர் மனைவியும்

ஹைதராபாத்

வுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 5000 தெலுங்கர்கள் பொது மன்னிப்பு  கெடுதாண்டியும் சட்டவிரோதமாக  வசிப்பதால் சிறைத்தண்டனையும் அபராதமும் பெற நேரிடும்

சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக பல நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர்.   அவர்களிடம் சரியான விசா இருப்பதில்லை,  விசா உள்ள சிலரும் பயணிகள் விசாவில் வந்தவர்கள்.  இவர்களை கட்டுப்படுத்த சவுதீ அரசாங்கம்,  இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி நாட்டை விட்டு வெளியேற இன்று வரை கெடு விதித்து இருந்தது.

ஆனால் இந்த கெடுவை பயன்படுத்தாமல் இன்னும் பலர் சவுதி அரேபியாவில் உள்ளனர்.    அதில் சுமார் 5000 தெலுங்கர்களும் அடங்குவார்கள்.   கெடு தாண்டி வசித்தால் 2 வருட சிறைத்தண்டனையும்,  10000 ரியால் (1.8 லட்சம் ருபாய்) அபராதமும் தண்டனை வழங்கப்படும்.

இந்நிலையில் ராசையா  என்னும் நிஜாமாபாத் நகரின் அருகில் வசிக்கும் ஒரு நபர், போலீசின் தன் மகன் அனில் என்பவர் சவுதியில் சட்டவிரோதமாக மாட்டிக் கொண்டிருப்பதாகவும் அவரை விடுவிக்கும்படியும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அனில் தனது முதலாளியின் கட்டாயத்தால் சவுதி அரேபியாவில் ஓட்டுனர் வேலை பார்க்கச் சென்றுள்ளார்.  அங்கு அவரை மிகவும் கொடுமை செய்ததால், அங்கிருந்து தப்பி ஓடினார்.   பாஸ்போர்ட் முதலாளியின் வசம் இருந்ததால் தூதரகத்தில் டூப்ளிகேட் பாஸ்போர்ட் தேவை என விண்ணப்பித்தார்.   ஆனால் அவர் முதலாளி அவர் திருடி விட்டு ஓடியதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார்.    அதனால் அனில் உயிருக்கே ஆபத்து உள்ளது.   அவர் இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி நாட்டுக்கு திரும்ப முடியவில்லை.  எனவே அனிலை பத்திரமாக அழைத்து வர ஆவன செய்ய வேண்டும் என அந்த வேண்டுகோளில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சமூத ஆர்வலர் வசந்த் கூறுகையில் “சவுதியில் 5000க்கும் மேற்பட்ட தெலுங்கர்கள் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.  அவர்களில் பெரும்பாலோர்   தங்களை அறியாமலேயே சட்டவிரோதமாக சவுதிக்கு சென்றவர்கள்.   பலரும் மிகச் சிறிய கிராமங்களில் பணி புரிவதால் இந்த பொதுமன்னிப்பு அறிவிப்பு அவர்களைப் போய் சேரவில்லை.   எனவே இந்திய அரசு இந்த பொது மன்னிப்பை மேலும் நீட்டிக்க ஆவன செய்யவேண்டும் “  என  தெரிவித்துள்ளார்.

அது தவிர பலர் நாடு திரும்பாத காரணம் அவர்களிடம் பயணச் செலவுக்கு கூட பணம் இல்லாததே என தகவல் வந்துள்ளது.

இந்திய அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்