1

துவரை இல்லாத அளவுக்கு நடிகர் சங்க தேர்தல்  களேபாரமாக இருக்கிறது. ஊழல், ஆபாச பேச்சு என்று ஆரம்பித்து ஜாதி வெறியில் வந்து நிற்கிறது.

சரத் அணியினர் கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்பில் அடே புடே என்று ஒருமையில் பேசி முகம் சுளிக்க வைத்தார் சிம்பு. இன்னொரு புறம், விஷால் தமிழர் அல்ல என்பதைக் குறிக்க, “விஷால் ரெட்டி” என்று சாதியைக் குறிப்பிட்டே பேசினார் ராதிகா. இதுவும் பத்திரிகையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

இப்போது எதிர் முகாமில் இருந்து ராதிகாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க தயாரானார்கள்.

“இத்தனை நாள் இல்லாமல் இப்போது திடீரென தமிழ்ப்பற்று வந்துவிட்டதா ராதிகாவுக்கு?  இதுவரை அவர் வேற்று மொழி படங்களில் நடித்தில்லையா?  அவர் நடித்த படங்களில் எல்லாம் ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் எல்லோரும் தமிழர்கள்தானா?

விஷாலை ரெட்டி என்கிற இவர் சொன்னபோது, அருகில் உட்கார்ந்திருந்தவர் கேரளத்தைச் சேர்ந்த ஊர்வசிதானே!

ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோதும்,  சிங்கள டிவிக்கு தொடர்களை விற்றவர்தானே இவர்?” என்றெல்லாம் பொங்கியிருக்கிறார்கள்.

அதோடு, “ராதிகா தனது அப்பாவாக நடிகவேள் எம்.ஆர்.ராதாவை சொல்கிறார். அவர் தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்தவர்தானே..! எம்.ஆர்.ராதாவின் தந்தை பெயர் ராஜகோபால் நாயுடு! இதற்கு என்ன சொல்வார் ராதிகா?

s

தவிர, அவரது அம்மா கீதா, சிங்களர்தானே! அப்படியானால் ராதிகா யார்? அது மட்டுமல்ல.. ராதிகா மட்டும்தான் எம்.ஆர்.ராதாவின் மகள்.  அவரது தங்கை  நிரோஷாவுக்கு எம்.ஆர்.ராதா தந்தை அல்ல.  இதுவும் ஊரறிந்த விசயம்தான். பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

ஒரு முறை ராதாரவி, “ராதிகாவை என் சகோதரின்னு சொல்லாதீங்க.. எங்கப்பா எத்தனையோ இடங்களுக்கு போய் வந்திருப்பார். அங்கி பிறந்ததெல்லாம் என் உடன்பிறப்பா ஆயிட முடியுமா” என்று வெளிப்படையாகவே கேட்டாரே.. இவர் எந்த அடிப்படையில் தன்னை தமிழச்சி என்கிறார்” என்றெல்லாம் ராதிகா மீது எதிர் விமர்சனங்களை வைக்க தயாராக இருந்தார்கள்.

விசயம், சீனியர்கள் காதுக்கு போகவே,  “நாமதான் ஜெயிக்கப்போறோம்..  அவங்கதான் பிரச்சினையை திசை திருப்பப் பாக்கிறாங்க.. அதுக்கு நாம பலிகடா ஆயிடக்கூடாது.  நடிக்கறதோட இல்லாம, தமிழருக்காக எவ்வளவோ பேசியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவரது பெயரை இழுக்கவே கூடாது!” என்று இளசுகளின் வாய்க்கு பூட்டு போட்டுவிட்டார்கள்.