டில்லி

ந்திய அரசு 59 நீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ளதால் பல அரசுத் துறைகள் தங்கள் டிக் டாக் கணக்குகளை நீக்கி உள்ளன.

இந்திய அரசு நேற்று டிக்டாக், ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்தது.   இந்த தடை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த செயலிகள் நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருஐபபட்டுக்கு எதிரானது எனவும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அபாயமானது எனவும் தெரிவித்திருந்தது.

இந்த செயலிகளில் டிக்டாக் செயலி பல்வேறு  இந்திய அரசியல் துறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.  இந்தியப் பத்திரிகை தகவல் மையம் பிரதமர் நாட்டுக்கு அளிக்கும் செய்திகள் உள்ளிட்ட பலதரப்பட்ட தகவல்களை தனது டிக்டாக் பக்கம் மூலம் பகிர்ந்து வந்தது.  அந்த கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மைகவர்ன்மெண்ட், ஐஆர்சிடிசி உள்ளிட்ட துறைகளின் கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன,  இதனால் இந்த துறைகளின் தகவல் பரிமாற்றத்தில் தடை ஏற்பட்டுள்ளது.  இதைப் போல் கொரோனா குறித்த தகவல்களைப் பகிர்ந்து வந்த கர்நாடக அரசு, மும்பை மாநகராட்சி, மகாராஷ்டிரா சுகாதாரத் துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளும் தங்கள் கணக்குகளை நீக்கி உள்ளன.