க்னோ

பா ஜ க ஆட்சி செய்யும் உ பி மாநில சுற்றுலாத்துறையின் கையேட்டில் இருந்து தாஜ்மகால் நிக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலுடன் ஒரு கையேடு வெளியிட்டுள்ளது. அது எண்ணிலடங்கா சாத்தியக்கூறுகள் (BOUNDLESS POSSIBILITIES) என்ற பெயரில் வந்துள்ளது.  அதில் உ பி மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் இடம் பெற்றுள்ளது.  ஆனால் அதில் தாஜ்மகால் இடம் பெறவில்லை.

முதல்வர் யோகி ஆதித்யநாத், உபி சுற்றுலா அமைச்சர் ரீட்டா பகுகுணா ஆகியோரின் புகைப்படங்கள், வாரணாசியின் கங்கா ஆரத்தி, புனித தலங்களின் விவரங்கள் ஆகியவை உள்ளன.  இது தவிர உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை பூசாரியாக பொறுப்பு வகிக்கும் கோரக்பீத் முக்கிய சுற்றுலாத் தலமாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நாடெங்கும் உள்ள பல எதிர்கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே யோகி ஆதித்யநாத் தாஜ்மகால் இந்திய கலாசாரத்தை கூறும் கட்டிடம் அல்ல என கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.