சென்னையில் ரயில்கள் இப்போதைக்கு இயக்கப்பட மாட்டாது..

ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்களை இயக்க ரயில்வே துறை  முடிவு செய்துள்ளது.

இதற்கான முன் பதிவு நேற்று ஆரம்பமானது.

2 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த ரயில்கள் இயக்கத்தால் சென்னை வாசிகள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

ஆனால் இப்போதைக்குச் சென்னையில் இருந்து எந்த ரயிலும் இயக்கப்படப்போவதில்லை.

சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.

சென்னை நகரில் கடந்த சில நாட்களாகத் தினசரி 300 முதல் 400 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

’’ எனவே  சென்னையில் தற்போது ரயில்கள் இயக்கப்பட மாட்டாது’’ என தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 புதுடெல்லி –சென்னை இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மட்டும் வாரம் இரண்டு முறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்