சென்னை:  சென்னைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
koyambedu-market-1 சென்னையில் கடந்த சில மாதமாக காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. கிலோ 50 ரூபாய்கு குறைந்து எந்த காய்கறிகளும் வாங்க முடியாத நிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை 100 ரூபாய்க்கு மேல் எகிறயிது.  தற்போது அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
இதுபற்றி கோயம்பேடு மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து  அதிகரித்து  உள்ளது. இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது விலை பெருமளவில் குறைந்துள்ளது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் காய்கறிகள் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறைந்து உள்ளது. தேங்காயின் விலையும் மலிவாக உள்ளது. ஒரு காயின் வலை அளவுகேற்ப ரூ.10 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.