சென்னை:

காவல்துறையின்ர பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர், ‘அனைத்து மாநகர ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தங்களுக்குள் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை உருவாக்கி, அதில், காவலர்களின் சிறப்பான செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை புகைப்படம், வீடியோ மற்றும் சிறு குறிப்புடன் பதிவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது காவல்துறை யினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

செல்போன் பயன்படுத்தாமல் எப்படி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவது என பல காவல்துறையினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கிடையில், பணி நேரங்களில் போக்குவரத்து போலீசார் செல்போனை பயன்படுத்து கிறார்கள் என்று உயர்நிதி மன்ற நீதிபதி ஒருவர் விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துகாவல்துறை பிரிவுகளுக்கும் டிஜிபி டி.கே. ராஜேந்திரன்  மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

அதில்,  பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போனை தங்கள் வசம் எடுத்து செல்லக் கூடாது என்றும், அதைமீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு இந்த விதிமுறை பொருந்தும்.

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போராட்ட சம்பவங்களில் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடும் போலீசார் கண்டிப்பாக செல்போனை எடுத்து செல்லக்கூடாது.

இவ்வவாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.