சென்னை:
சிபிஐ கைது செய்த சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பசுல்லா ரோடில் வசிப்பவர் சேகர் ரெட்டி. பிரபல அரசு கான்ட்ராக்டர். மணல் குவாரி கான்ட்ராக்ட் எடுத்தது மூலம் இவர் ஆளும் அதிமுக அரசின் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் இவர் இருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்நிலையில வருமான வரித் துறை அதிகாரிகள் இவரது வீடுகள், அலுவலகம், உறவினர் வீடுகளில் நடத்தப்ப்ட சோதனையில் ரூ. 131 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ. 34 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாகும். மேலும் 177 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவை அனைத்தும் கணக்கில் காட்டப்படாதது என்பது தெரியவந்தது. இந்நிலையில் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று 3 பேரையும் விசாரணைக்கு வருமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து சென்னை புழல் சிறையல் அடைக்கப்பட்டரனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனை, விசாரணை அடிப்படையில் தான் இன்று காலை முதல் தமிழக அரசு தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.