டோக்கியோ

ன்று காலை 5.28 மணிக்கு ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பசுபிக் கடலில் உள்ள ஹோன்ஷூ தீவில்  இன்று காலை 5.28 மணிக்குச் சக்தி வாயநித நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதில் கட்டிடங்கள் வேகமாகக் குலுங்கியது.  இதனால் மக்கள் கடும் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

தேசிய புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.  சக்தி வாய்ந்த இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.