sch

 

சென்னை:

திய உயர்வு உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அரசுப்பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச. கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உள்பட பிற கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது,

“இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஒரு சில சங்கங்கள் மட்டுமே கலந்துகொள்வதால், பிற சங்கங்களைச் சார்ந்த ஆசிரியர்களுக்கும் இன்று ( 08.10.15 – வியாழக்கிழமை) பணியாற்றுவார்கள்.

அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்

முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர், தங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று( வியாழக்கிழமை) எவ்வித தடங்கலுமின்றி செயல்பட கோரிக்கை வைக்க வேண்டும்.

அதே போல மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏதேனும் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத நிலையில், அப்பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடிப் பணியாளர் ஆகியோரைப் பயன்படுத்தி பள்ளிகள் செயல்படுவதை உறுதிப்படுத்திட வேண்டும். கல்வித்துறையைச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரைக் கொண்டுஅனைத்துப் பள்ளிகளும் தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் இருவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக இருப்பின், பள்ளியின் வகுப்பறை சாவிகளை புதன்கிழமையே சத்துணவு அமைப்பாளர்/ அங்கன்வாடிப் பணியாளரிடம் ஒப்படைத்து பள்ளி நடைபெறுவதை உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

எந்த ஒரு காரணத்தாலும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதை தவிர்க்கும் வகையில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்”

  • இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இன்று அரசுப்பள்ளிகள் அனைத்தும் இயங்கும் என தெரியவருகிறது.