Jayalalithaa-Speaks-today-In-kancipuram
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 9-ந் தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, 11-ந் தேதி விருத்தாசலத்திலும், 13-ந் தேதி தர்மபுரியிலும், 15-ந் தேதி அருப்புக்கோட்டையிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்டம் வாரணவாசியில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், செய்யார், வந்தவாசி ஆகிய 18 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தொடர்ந்து, வருகிற 20-ந் தேதி சேலம், 23-ந் தேதி திருச்சி, 25-ந் தேதி புதுச்சேரி, 27-ந் தேதி மதுரை, மே மாதம் 1-ந் தேதி கோவை, 3-ந் தேதி விழுப்புரம், 5-ந் தேதி பெருந்துறை, 8-ந் தேதி தஞ்சாவூர், 10-ந் தேதி வேலூர், 12-ந் தேதி திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.