சென்னை:
காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 
1
சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு  நேற்று முன்தினம் மாலை திடீர் இதய முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.
அவரது உடல் இன்று (செவ்வாய்கிழமை ) அதிகாலை 2.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து அவருடைய இல்லமான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க., அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் உடலுக்கு சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன.
இன்று அதிகாலை ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.
மாலை 4.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.