j

வெள்ள நிவாரண பணிகள் குறித்து சமீபத்தில் முதல்வர் ஜெயலிலா முதன் முதலாக தனது பேச்சை பதிவு செய்து வாட்ஸ் அப்பிலும் பதிவேற்றினார்.   அதை கிண்டலடிக்கும் விதமாக யாரோ,   ஜெ. பேச்சுக்கு  கவுண்டமணி கவுண்ட்டர் கொடுப்பது போல மிக்ஸிங் செய்து உலவவிட்டிருக்கிறார்கள்.

அதன் ரீடிங் வெர்சன் (!) இதோ…

 

ஜெ. : “வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்.

கவுண்டமணி : யாருங்க, நம்ம அம்மாங்களா? பேசுங்க பேசுங்க!
.
ஜெ. : கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்.
.
கவுண்டமணி : இது உலக மகா நடிப்புடா சாமி!
.
ஜெ. : கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.
.
கவுண்டமணி : அப்படியே நீங்க செஞ்சிட்டாலும், நாங்கெல்லாம்!
.
ஜெ. : உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.
.
கவுண்டமணி : இதை நீங்க சிரிஜிகிட்டே சொன்னதான் நாங்க நம்புவோம் !
.
ஜெ. : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.
.
கவுண்டமணி : அதெல்லாம் நடக்குது.. ஆனா யாரு அதை செஞ்சானு இந்த உலகத்துக்கே தெரியும் .
.
ஜெ. : அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்.
.
கவுண்டமணி : ஸ்டிக்கர் ஓட்ட தானே ?
.
ஜெ. : உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்.
.
கவுண்டமணி : எங்க வீட்டில ரெண்டு கிலோ துன்பம் இருக்கு வேணும்களா?
.
ஜெ. : எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்.
.
கவுண்டமணி : உங்க சொத்தையெல்லாம் எங்க பேருக்கு எழுதி வைச்சுட்டு சொல்லுங்க தாயி … நாங்க நம்புறோம்…
.
ஜெ. : என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அற்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
.
கவுண்டமணி : சத்திய சோதனை!
.
ஜெ. : இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!”
.
கவுண்டமணி : இந்த வாக்கியத்தை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வைச்சுட்டு உட்காந்துக்கோங்க…. உங்களுக்கு பின்னாடி வர சந்ததி படிச்சி தெரிஞ்சிகிட்டும்…